வெள்ளி, 11 ஜூன், 2010

குச்சிப்புடி

குச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு நடன நாடக வடிவமாகும். இப் பெயர் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிலாபுரம் என்ற கிராமத்துடன் தொடர்புடையது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி தொடக்கம் இக் கிராமத்திலிருந்து பரவத்தொடங்கிய இது இன்று இந்தியாவின் ஒரு முக்கிய நடனமாகப் பிரபலமாகியுள்ளது.

வரலாறு

நெடுங்காலமாக தேவதாசிகள் இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில் ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் பிராமணர்களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது.

தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நடனம்.

நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கு ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயல்பட்டிருக்கிறது. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம்.

இசைக்கருவிகள்

இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின் பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.

நடனமுறை

குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு

கதக்


வட இந்தியாவில் மிகப் பிரபல்யம் மிக்க சாஸ்திரிய நடனக்கலைகளுள் ஒன்றாகும். கதா என்ற சொல்லின் பொருள் கதை என்பதாகும். கதையைக் கூறுபவர் கதக் என்றழைக்கப்படுவார். கதைகளின் விவரிப்பிலிருந்து அங்க அசைவுகளையும் சைகைகளையும் கொண்டதாக கதக் நடனம் உருவாகின்றது. பரத நாட்டியம் முன்பு ஆலய வழிபாடாக இருந்தது. கதகளி நடனத்தின் ஒரு அற்புதமான தோற்றத்தை உருவாக்க முயன்றது. அவ்விரண்டினைப் போலன்றி கதக் இஸ்லாமிய அரசர்களின் சபைகளின் கலை நிகழ்ச்சியாக இருந்தது

கதகளி


கதகளி இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதகளி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன.
கதகளி என்ற பதத்திற்கு 'கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல்' என்பது பொருள். 'ஆட்டக்கதை' என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. முடியேட்டு, பகவதி பாட்டு, காளியாட்டம், தூக்கு முதலான இந்த ஆடல் வகைகள், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே, மக்களின் வாழ்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகிறது. கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதாயமாக அக்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன.
முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் முக்கியமான அம்சங்களாகும். ஒப்பனையும், உடையலங்காரமும் இதனை ஒரு தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன

1 கதகளி வேசப் பொருத்தம்
2 பச்சை வேசம்
3 கத்தி வேசம்
4 தாடி வேசம்
5 கரி வேசம்
6 மினுக்கு வேசம்
7 கதகளி நடிப்பு முறை


கதகளி வேசப் பொருத்தம்

தேவர்கள், அசுரர்கள் முதலான புராண சம்பந்தமான பாத்திரங்களே பெரும்பாலும் இந்நாடகங்களில் வருகின்றபடியால், பரிச்சயமான தோற்றத்தைத் தவிர்த்து, அமானுஷ்யமான கதாபாத்திரங்களாக வேஷக்கட்டு அமைகிறது. கதகளி நடிகர்கள், பச்சை, கத்தி, தாடி, கரி, மினுக்கு என ஐவகை முக வேஷத்தை ஒட்டி பிரிக்கப் படுகின்றனர்.

பச்சை வேசம்

தேவர்கள், கிருஷ்ணன், இந்திரன் போன்ற கதாபாத்திரங்கள் பச்சை வேஷத்திற்கு உரியவராவர். இத்தகைய பாத்திரங்களுக்கு, அரிசிப் பொடியையும் சுண்ணாம்பையும் கலந்து முகத்திற் 'சுட்டி' அமைப்பார்கள். காதின் மேற்புறத்திலிருந்து தாடை எலும்பைப்பற்றி வில் போல மத்தியில் அகன்றும் நுனியில் குறுகியும் இருக்கும்படி ஒப்பனை செய்வார்கள். சுட்டியின் உட்பாகத்திலும், முகத்திலும், நெற்றியிலும் பச்சைச்சாயம் தீட்டப்படும். இதழிலே சிவப்பு, புருவத்திலே மைக்கறுப்பு, நெற்றியிலே நாமம் முதலியன இடம்பெறும். கதகளி சம்பிரதாய அஹார்ய அபிநயம் வருமாறு: கச்சை, முன்வால், பின்வால், உடுத்துக்கட்டு, உள் குப்பாயம், வெளிக்குப்பாயம், தோள்பூட்டு, தோள்வளை, கடகம், பருத்திக்காய்மணி, கிரீடம், நெற்றிச்சுட்டு, மேல்கட்டு, சாமரம், வெள்ளிநகம் போன்ற ஆடையாபரணாதிகளே கதகளியின் சம்பிரதாய ஆஹார்ய அபிநயமாகும்.

கத்தி வேசம்

மூக்கின் கீழிருந்து கண்வரை கத்தரிபோல, வெள்ளை பூசி, அதிலே ரத்தச் சிவப்புப் பூசினால் மேலே குறித்த பச்சை வேஷத்தில் மாறுதல் ஏற்பட்டு கத்தி வேஷம் ஆகிறது. நெற்றியிலே புருவங்களுக்கிடையிலும், மூக்கு நுனியிலும், வெள்ளை உருண்டைகள் ஒட்டப் பெற்று, முகத்தின் தோற்றமே மாறுபாடடைந்து இராவணன், ஹம்சன், சிசுபாலன் முதலிய அசுரர்களைக் குறிக்கின்றது. கோரப்பற்கள் பயங்கரமான இராக்ஷத தோற்றத்தை அளிக்க வல்லன.

தாடி வேசம்

சிவப்பு, வெள்ளை, கறுப்பு நிறத் தாடிகளைத் தாங்கியிருப்பதனால் இந்த வகைக்குத் தாடி வேஷம் என்று பெயர். சிவப்புத் தாடி துச்சாதனனைப் போன்ற கொடியவர்களையும், வெள்ளைத்தாடி அனுமன், சுக்கிரீவன் போன்றவர்களையும் குறிக்கிறது.

கரி வேசம்

கறுப்பு சாயத்திலும், கறுப்பு உடையிலும் தோன்றும் சூர்ப்பனகை போன்ற பாத்திரங்களுக்கு கரி வேஷம் என்று பெயர்.
[தொகு]மினுக்கு வேசம்

உடம்பில் அழகிய நிறமாக இலேசாக வர்ணம் பூசி, மைக்காத் தூளைத் தெளிப்பார்கள். ரிஷிகள், பிராமணர்கள், அரக்கியர் அல்லாத மற்றப் பெண்கள் ஆகியோர்களைக் குறிக்க மினுக்கு வேஷம் அமைக்கப் பெறும். எல்லா வகைப் பாத்திரங்களும் தங்கள் கண்கள் சிவப்பாகத் தோன்றும்படி செய்து கொள்வார்கள். ஆடவர்கள் தங்கள் விரல்களில் நீண்ட வெள்ளி நகங்களைத் தரித்திருப்பார்கள். உடையிலும் அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. ஆடவர்கள் பெரும்பாலோர் கீரீடம் அணிந்திருப்பர்

கதகளி நடிப்பு முறை

பேச்சில்லாத நாடகமானபடியால் அபிநயம் நாடகத்தின் பாஷையாக அமைகிறது. 10 அல்லது 12 வயதிலும் ஆரம்பிக்கப் பெற்று, நடிகர்களுக்குக் கடுமையான பயிற்சியளிக்கப் படுகிறது. கதகளி நடக்க இருப்பதை மத்தளம் முழக்கி அறிவிப்பார்கள். இரவு சுமார் 9 அல்லது 10 மணிக்குத் தொடங்கி இரவு முழுவதும் நாடகம் நடைபெறும். மேடையையும் சபையையும் பிரித்துக் காட்டும் வகையிலே, பெரிய குத்து விளக்கு வைக்கப் பெற்று, அதன் ஒளியிலே நாடகம் நடிக்கப் பெறும். முதலில் மத்தளம், செண்டை வாசிப்பார்கள். இது அரங்குகழி எனப்படும். அதன்பின் தெய்வ வணக்கம். அப்புறம் திரை நோக்கு. இது பக்திரஸமான பாடல். பாடும்போது திரைக்குப் பின்னாலிருந்து கலாசங்களுடன் ஆடும் பாடல். சில வேளைகளில் திரையைப் பதித்து முகத்தை மட்டும் சபையோருக்குக் காட்டுவார்கள். திரை எடுத்ததும் தோடயம், புறப்பாடு போன்ற ஆடல் வகைகள், அதற்கப்புறம் மேளப்பதம். இது கதையின் அறிமுகப்பாடல். இதன் பின்னர் ஆட்டக்கதை. இறுதியில் தனாசி என்னும் மங்களம் ஆகும்.
கதகளி நடனத்தில் பாடுபவர்களும், மத்தளம் செண்டை வாசிப்பவர்களும் இருப்பார்கள். பிரதான பாடகர் பாடும் ஒவ்வொரு வரியையும் சீடர்கள் திருப்பிப் பாடுவார்கள். இவர்கள் பாடும்போது நடிகர்கள் அபிநயம் பிடிப்பார்கள். பாட்டும், நடனமும் அநேகமுறை நடைபெறும். காதற் காட்சிகளுக்கு பதிஞ்ச ஆட்டம் என்று பெயர். இது மெதுவாக ஒருமணி நேரமாவது நிகழும். கதையிலே, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போராட்டம் நடந்து இறுதியில் தர்மத்தின் வெற்றியையும் அதர்மத்தின் அழிவையும் கதகளி நாடகங்கள் போதிக்கின்றன. வீரம், ரெளத்திரவம் ஆகிய ரஸங்கள் கதகளியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அசுர பாத்திரங்கள் மேடையில் தோன்றும்போது கர்ஜனை செய்வதும் முன்னால் பிடித்திருந்த திரையைப் பிடித்திழுப்பது போன்ற ஆர்ப்பாட்டங்களும் செய்வர். இவ்வாறாக இரவு முழுவதும் நடைபெறும் கதகளி விடியும் தருணத்தில் பக்தி ரஸமான நடனத்துடன் நிறைவுபெறும்

நடன வகைகள்

ஒடிசி (நடனம்)

ஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப் படும் ஒரு நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர்.
வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. ராணி கும்பா குகைகளில் காணப்படும் சிற்பங்களின் ஒடிசி நடனமாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்திலேயே ஆடப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாகும். சில அறிஞர்கள் ஒடிசி நடனமாவது, பரத நாட்டியத்திற்கும் முந்தயது என்று கருதுகிறார்கள்.
ஒடிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசையில் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை மட்டுமல்லாது ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் பார்க்கலாம். பக்கவாத்தியங்கள் மத்தளம், தபலா, புல்லாங்குழல், மிருதங்கம், மஞ்சீரா, சித்தார் மற்றும் தம்பூரா ஆகியவை அடங்கும்.

நடன முறை

ஒடிசி நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஜகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான 'மங்களசரண்' என்னும் நடனத்துடன் தொடங்கும். பின்னர் குரு வந்தனம் நிகழும். அடுத்தது, தாளக்கட்டிற்கு ஏற்றவாறு 'பல்லவி' நடனமும், கை முத்திரைகளும், முக பாவனைகளும் கூடிய 'அபிநயம்' நடனமும் ஆடப்படுகின்றன. 'மோக்ஷம்' என்னும் நடனம் இதன்பின் ஆடப்படுகிறது. பின்னர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் 'தசாவதாரம்' மற்றும் சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் 'பாட் நிருத்யம்' ஆகியவை ஆடப்படுகின்றன.
ஒடிசி நடனத்தின் இன்றைய வளர்சிக்குக் காரணமாக விளங்கியவர் குரு கேலு சரண் மகாபாத்ரா. உலக அளவில் இந்த நடனம் பேசப்பட இவரும், இவரது மாணவரான சஞ்சுக்தா பணிகிரஹியும் காரணமானவர்கள். மேலும் குரு பங்கஜ் சரண்தாஸ், குரு மாயாதர் ராவுட், குரு தேவ்பிரசாத் தாஸ் ஆகியோரும் ஒடிசி இன்று உலக அளவில் பேசப்படக் காரணமானவர்கள்

சாம்ப்ரா

சாம்ப்ரா/சாம்ப்ரா மோரா என்பது, கிரனாதாவிலுள்ள உரோமா மக்களால் ஆடப்படும் ஒரு நடனம். இது, மூரிய நடனங்களிலிருந்து பிறந்தது என நம்பப்படுகிறது. இது கித்தானோ திருமணங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக சாக்ரோமோன்தே குகைகளிலும் குன்றுகளிலும் முக்கியமாக ஆடப்படுகிறது

மோகினி ஆட்டம்

மோகினி ஆட்டம் குச்சிப்புடி போல் சென்ற நூற்றாண்டில் ஒரு சாஸ்திரிய நடனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மோகினி என்ற சொல் ஒரு அழகான பெண்ணென்றும், ஆட்டம் நடனம் என்றும் பொருள் படும். பாற்கடலிலிருந்து தோன்றிய அமிர்தத்தை விநியோகிக்கும் மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய மோகினியே இந்த நடனக் கலையின் பெயருக்கு மூல காரணம் ஆகும். மோகினி ஆட்டத்தில் பரதநாட்டியத்தின் சில சாயல்களையும் காணலாம்

குச்சிப்புடி

குச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு நடன நாடக வடிவமாகும். இப் பெயர் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிலாபுரம் என்ற கிராமத்துடன் தொடர்புடையது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி தொடக்கம் இக் கிராமத்திலிருந்து பரவத்தொடங்கிய இது இன்று இந்தியாவின் ஒரு முக்கிய நடனமாகப் பிரபலமாகியுள்ளது.

வரலாறு

நெடுங்காலமாக தேவதாசிகள் இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில் ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் பிராமணர்களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது.

தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நடனம்.

நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கு ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயல்பட்டிருக்கிறது. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம்

இசைக்கருவிகள்

இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின் பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.

நடனமுறை

குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு

கை அசைவுகள் (பரதநாட்டியம்)

கை அசைவுகள் (சமசுகிருதம்: அஹம்யுத ஹஸ்தங்கள்) பரதநாட்டியத்தில் ஒரு முக்கிய கூறாகும்.

பின்வருவன கை அசைவுகளின் பட்டியல்

கொடி
முப் பாகக் கொடி
அரைப்பங்குக் கொடி
கத்தரீமுகம்
மயில்
அமைதி
வளைந்தது
கிளி மூக்கு
முசுடிக்கை
உச்சி
விளாம்பழம்
கடகாமுகம்
ஊசி
பிறை நிலா
பத்மகோசம்
பாம்பு படம்
மால் தலை
சிங்கத்தின் முகம்
காங்குலம்
மலர்ந்த தாமரை
சதுரம்
வண்டு
அன்னத்தின் அலகு
அன்னத்தின் சிறகு
இடுக்கி
மெட்டு
சேவல்
திரிசூலம்
புலி
எட்டுக்கால் பூச்சி
அம்பு
அரை ஊசி

நடராசர்


இந்துக்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே நடராசர் திருக்கோலம் ஆகும். நடராசர் என்ற சொல் நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் எனப் பலவாறாகக் குறிப்பிடப்படும் சிவன் நடனத்தில் வல்லவனாக உருவகிக்கப்படுகிறான். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்

தோற்றம்

சைவ ஆகமங்களிலும், சிற்பநூல்களிலும், பல்வேறு சைவ நூல்களிலும் நடராசர் தோற்றத்தின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. கோயில் கட்டிடச் சிற்பங்களிலும், வணக்கத்துக்குரிய சிலைகளாகவும் காணப்படும் உருவங்களும் நடராசர் தோற்றத்தை விளக்குகின்றன. ஊன்றியிருக்கும் கால், குப்புற விழுந்து கிடக்கும் முயலகன் என்ற அசுரனின் முதுகின்மீது ஊன்றப்பட்டுள்ளது. இடது கால் உடம்புக்குக் குறுக்காகத் தூக்கப் பட்ட நிலையில் உள்ளது. நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க் கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயஹஸ்தம்) உள்ளது. இடது கீழ்க் கை தும்பிக்கை நிலை (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில், விரல்கள், தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது.
மயிலிறகுபோல் வடிவமைக்கப்பட்ட தலை அணி ஒன்றும், பாம்பும் இத் தோற்றத்தின் தலையில் சூடப்பட்டுள்ளது. இவற்றுடன், கங்கையும், பிறையும் சடையில் காணப்படுகின்றன. முடிக்கப்படாத சடையின் பகுதிகள் தலைக்கு இருபுறமும், கிடைநிலையில் பறந்தபடி உள்ளன. இடையில் அணிந்துள்ள ஆடையின் பகுதிகளும் காற்றில் பறக்கும் நிலையில் காணப்படுகின்றன

தோற்ற விளக்கம்

நடராசர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும் பழங்கதைகள் ஊடாகவும், தத்துவங்களாகவும் சைவ நூல்களிலே காணக்கிடைக்கின்றன. சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.
ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.
பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில்் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!
அவற்றில், சேஷநாகம் - கால சுயற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன.
பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம்.
ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.
வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.
தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.
முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.
பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.
அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது.
நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!
பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!

பாவம்


பாவம் என்பது பரத நாட்டியத்தில் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை உடலுறுப்புகளாலும், முகத்தாலும், வாக்கினாலும் வெளிப்படுத்துவதாகும். உடலில் உண்டாகும் எட்டு நிலைகளை பாவம் என்று விவரிக்கின்றார். அவை மெய்சிலிர்த்தல், கண்ணீர் விடுதல், முகத்தின் வண்ணம் மாறுதல், ஸ்தம்பித்தல், வியர்த்தல், நடுங்குதல், குரல் மாறுதல், மயங்கி வீழ்தல் ஆகியவையாகும்

பரதநாட்டியம்


பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றூம் மேலக்கடம்பூர்ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகளும் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், 'வழுவூர் ராமையா பிள்ளை', 'தனஞ்சயன்', 'அடையார் லக்ஷ்மணன்', 'கலாநிதி நாராயணன்' ஆகியோர் குறிப்படத்தக்கவர் ஆவர்

வியாழன், 10 ஜூன், 2010