வெள்ளி, 11 மே, 2012

பாவங்கள் பேசும் பரதநாட்டியக் கலை

பாவங்கள் பேசும் பரதநாட்டியக் கலை

பாவங்கள் பேசும்
பரதநாட்டியக் கலை
ஒவ்வோர் இனத்தின் பெருமைகளைப் பறை சாற்றுவது அவ்வினத்தினால் பேணி வளர்க்கப்பட்டு வரும் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவாகும். இந்த வகையில் தமிழினம் மிகுந்த சிறப்புகளைக் கொண்ட ஓர் இனமாக மிளிர்ந்து வருவதை உலகறியும்.
தமிழினத்தின் கலைகளில் மிக முக்கியமானதோர் இடத்தைப் பரதநாட்டியக் கலை பெற்றிருக்கிறது என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். அதற்கு ஒரு காரணமாக அமைவது அதன் தொன்மையாகும். இந்நடனக் கலையின் பெருமைகளையும் நுட்பங்களைப் பற்றியும் பரத நடன விற்பன்னர்கள் சிலர் ஆய்வு நுட்பங்களை எழுதியும் அதன் வளர்ச்சி மற்றும் அதன் மாற்றங்கள் குறித்து தமது அனுபவபூர்வமான கருத்துக்களையும் தெரிவித்து வந்திருக்கிறார்கள். நாட்டியத்தில் காட்ட முடியாத ஞானமோ, சிறப்போ, கலையோ, செயலோ எவையுமே நமக்கில்லை என்பர்.
பரதக் கலையின் வளர்ச்சி குறித்து சென்னை பரதாஞ்சலி பரதநாட்டிய விற்பன்னர்களான வி.பி. தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் ஆகியோர் இணைந்து "சிவயோகம்' (லண்டன்) சிறப்பு மலரில் எழுதிய கட்டுரை ஒன்றின் சில அம்சங்களைக் கண்டுக் குறிப்பிடுதல் தகும்.
நடனக் கலைஞர்களைப் பற்றி சங்க இலக்கியமான தொல்காப்பியம், சங்க இலக்கியமான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை போன்ற நூல்கள் மிக அதிக அளவில் கூத்து என்றும் கடத்தினை நிகழ்த்துபவர்கள் கடத்தல் என்றும் விரலியர் என்றும் எடுத்துக் கூறிப் பலவாறாகப் போற்றுகின்றன.
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையும் ஆய்ச்சியர் குழுவையும் பண்டைய நடனக் கலையின் நுட்பங்களையும் பாடு பொருள்களையும் விரிவாக எடுத்து இயம்புகின்றன.
சிலம்பினுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தம் உரையில் கூத்து நூல், பரத சேனாதிபதியம், இந்திர காளியம் எனும் நடன நூல்களைப் பற்றி விவரித்துள்ளார். இத்தகு காலத்தொன்மையுள்ள பரதம் காலப்போக்கில் தனது புறவடிவையும் அர வடிவான பாடுபொருளையும் மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது.
எந்த ஒரு கலையும் அது தோன்றிய காலத்தில் இருந்தது போலவே இன்றும் இருந்தால் அக்கலை தேக்க நிலையை அடைந்து விட்டது என்று பொருள். ஆனால் பரதக் கலை காலத்திற்கு ஏற்ப தன்னுள் மாற்றத்தைக் கொண்டு இன்னும் புதிது புதிதாக தனது நோக்கிலும் பாடு பொருள்களிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. இம்மாற்றம் பழமையை முற்றிலும் விளக்கி புதுமை மாறாத பழமை ஒன்றே குறி அளவில் மாற்றத்தைக் கொள்ளாது எனும் வரம்பினும் புதுமை எனும் புத்தொழியைப் பாய்ச்சியது எனலாம்.
பண்டைய மூவேந்தர் காலத்தில் இக்கலை கோயில்களில் பணியாற்றிய ருத்ர பணிகம், தேவர் அடியார், ஸ்ரீ மாணிக்கம் என்பவர்களால் பேணி வளர்க்கப்பட்டது. காலப்போக்கில் கோயில்களில் வருவாய் குறையவே கோயில்களில் பணியாற்றிய தேவர் அடியார்கள் இக்கலையைத் தங்கள் இல்லத்தில் கற்பிக்கத் துவங்கினர். அவ்வாறு அவர்கள் கற்பித்தபோது இக்கலையில் தங்களுக்கென ஒரு பாணியைப் பின்பற்றினர்.
துவந்த காலத்தில் கோயில்களில் ஆடப்பெற்ற நடனம், முற்றிலும் இறைவனின் புகழைப் பாடுவதாகவும் இறைவன் நிகழ்த்திய செயல்களுமென புராணங்கள் கூறிய செய்திகளையே பாடுவதாகவும் இறைவன் நிகழ்த்திய செயல்களுமென புராணங்கள் கூறிய செய்திகளையே பாடுபொருளாகக் கொண்டு அபிநயத்துடன் ஆடியும் வந்தனர்.
இறைவனின் உலாவிலும் இக்கணிகையர் நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியான சதுருத்தில் நடன நிகழ்ச்சியைச் செய்ததால் இது சதிர் என்னும் பெயரையும் பெற்றுத் திகழ்ந்தது.
கோயிலை நீத்த இந்நடனம் கணிகையர் இல்லத்தில் கற்பிக்கப்பட்டபோது இதனது பாடு பொருளிலும் அமைப்பிலும் பெருமளவு மாற்றங்களைக் கொண்டது. இம்மாற்றங்களைப் பெரிதும் முறைப்படுத்தியவர்கள் தஞ்சை நால்வர் எனில் மிகையாகாது.
தஞ்சை நால்வரின் பங்களிப்பில் பரதம் முறைப்படுத்தப்பட்டபோது இந்நடனத்தில் புஷ்பாஞ்சலி, பதம், வர்யும், ஜாவளி, தில்லானா போன்றன சேர்க்கப்பட்டன. இத்தகு மாற்றங்களைக் கொண்டிருந்தாலும் நால்வரின் படைப்புகளில் சிருங்கார தாமே பிரதான ரஸமாகக் கொள்ளப்பட்டது. சிருங்கார ரஸத்திலும் நாயக  நாயகி பாவத்தில் இறைவனுக்குப் பதிலாக அன்றிலிருந்து மன்னர்களைப் பாட்டுடைத் தலைவனாகவும் பாடல்கள் புனையப் பெற்றன. நடனங்கள் நிகழ்த்தப் பெற்றன.
ஆங்கிலேயர் வருகை பின்னர் சுதந்திரம் என்னும் சமூக மாற்றம் மற்றும் அரசியல் மாற்றங்களினால் அனைத்துச் செயற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அத்தகு மாற்றம் நடனத்திலும் ஏற்பட்டது. நடனம் கோயிலில் இருந்து கணிகையர் இடம் சென்று பின்னர் நடனப் பள்ளிகளை வந்தடைந்தது.
நடனப் பள்ளிகளை வந்தடைவதற்கு முன் பரதம் சில ஊர்களைச் சார்ந்த கலைஞர்களின் தனித்துவப் பந்தணை நல்லூர், மெலாட்டூர், வழுவூர், காஞ்சிபுரம் எனும் பாணிகளைக் கொண்டு அப்பாணிகளின் விதிமுறைகள் இன்று வரை பின்பற்றப்படுகின்றன'' என்றவாறு அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து திருமதி ருக்மணி அருண்டேல் உட்படப் பல நடன விற்பன்னர்கள் பரதநாட்டியக் கலையைச் செழுமைப்படுத்திப் பேணி வந்திருப்பதை நாமறிவோம்.
பாவம், ராகம், தாளம் ஆகியவற்றின் சங்கமமாக விளங்குவது பரதநாட்டியம்.
பாவமானது ஆண், பெண் இருபாலாருடைய மனத்திலுண்டாகும் உணர்ச்சிகளை ஜாடைகளால் எடுத்துக் காண்பிப்பது பாவமாகும். பாவமானது அவரவர்களின் பால், வயது மற்றும் சூழ்நிலைக்கேற்ற வண்ணம் வேறுபடக் கூடியது. இது கருத்துக்களைப் புலப்படுத்துவதோடு உணர்ச்சிகளை நவரஸங்கள் மூலம் அதாவது பாவத்தின் மூலம் வெளிப்படுத்திக் காட்டுவதேயாகும்.
இப் பாவம் நான்கு வகைப்படும். அவையாவன விபாவம், அனுபாவம், வியபிசாரி பாவம், சாத்வீக பாவம் என்பன. இந்நான்கு வகை பாவங்களும் கலந்து வருவது சஞ்சாரி பாவமாகும்.
இவ்விதமாக தமது நிருத்தியம் என்ற நூலில் குறிப்பிடும் பாத கலா வித்தகர் மீரா மங்கலேஸ்வரன் அவர்கள் ராகம், தாளம் ஆகியவற்றையும் விளக்கி இருக்கிறார். நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் நடனத்தின் முப்பெரும் பிரிவுகள் என்பதைக் குறிப்பிட்டு விளக்கும்போது நிருத்தியம் என்பதற்கு தரும் விளக்கம் கீழ்க்கண்டவாறு அமைகின்றது.
""கீதம், அபிநயம், பாவம் இவைகளைக் கொண்டு தாளக்கட்டு விடாமல் ஆட வேண்டியவை நிருத்தமாகும். நடனமாகிய நிருத்தமும் அபிநயக் கலையால் கதையை (கருத்துக்களை) வெளிப்படுத்தும் நாட்டியமும் கலந்து திகழும் கலை நிருத்தியம் எனப்படும். பாடலின் பொருளைக் கை முத்திரைகளினாலும் தாளத்தினைப் பாதங்களைத் தட்டி ஆடுவதாலும் பாவத்தினை முகத்தினாலும் கண்களினாலும் வெளிக்கெõண்டு வரல் நிருத்தியமாகும். ரஸ பாவங்களைக் கூட்டி தாளக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி கருத்தைப் புலப்படுத்தலே நிருத்தியமாகும். இதற்கு நிறையப் பயிற்சிகள் செய்ய வேண்டும். நன்றாகப் பயிற்சிகள் செய்யப்பட்டு ஆடப்படும் நிருத்தியம், மன நிறைவை அளிக்கவல்ல நுண்கலையாகும்'' எனக்குறிப்பிடுவர் பாவங்களையும் நவரஸங்களையும் பொருட்கள் மற்றும் செயற்பாடுகளையும் விளக்கும் அஸம்யுத ஆயத்தம் (ஒற்றைக் கை முத்திரைகள் மற்றும் ஸம்யுத ஹஸ்த்தும் (இரட்டைக் கை முத்திரைகள்) ஆகியவற்றையும் கண்டு விபரிக்கின்றனர்.
இங்கு நமது அட்டைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் நடன வித்தகி ரமா வைத்தியநாதன் தமது ஸம்யுத வரஸ்தம் மூலம் அருமையான பாவத்தை வெளிப்படுத்துவதை வாசகர்கள் கண்டு ரசிப்பார்கள்.

தஷ்ஷாயினி பிரபாகர்

ஒவ்வோர் இனத்தின் பெருமைகளைப் பறை சாற்றுவது அவ்வினத்தினால் பேணி வளர்க்கப்பட்டு வரும் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவாகும். இந்த வகையில் தமிழினம் மிகுந்த சிறப்புகளைக் கொண்ட ஓர் இனமாக மிளிர்ந்து வருவதை உலகறியும்.
தமிழினத்தின் கலைகளில் மிக முக்கியமானதோர் இடத்தைப் பரதநாட்டியக் கலை பெற்றிருக்கிறது என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். அதற்கு ஒரு காரணமாக அமைவது அதன் தொன்மையாகும். இந்நடனக் கலையின் பெருமைகளையும் நுட்பங்களைப் பற்றியும் பரத நடன விற்பன்னர்கள் சிலர் ஆய்வு நுட்பங்களை எழுதியும் அதன் வளர்ச்சி மற்றும் அதன் மாற்றங்கள் குறித்து தமது அனுபவபூர்வமான கருத்துக்களையும் தெரிவித்து வந்திருக்கிறார்கள். நாட்டியத்தில் காட்ட முடியாத ஞானமோ, சிறப்போ, கலையோ, செயலோ எவையுமே நமக்கில்லை என்பர்.
பரதக் கலையின் வளர்ச்சி குறித்து சென்னை பரதாஞ்சலி பரதநாட்டிய விற்பன்னர்களான வி.பி. தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் ஆகியோர் இணைந்து "சிவயோகம்' (லண்டன்) சிறப்பு மலரில் எழுதிய கட்டுரை ஒன்றின் சில அம்சங்களைக் கண்டுக் குறிப்பிடுதல் தகும்.
நடனக் கலைஞர்களைப் பற்றி சங்க இலக்கியமான தொல்காப்பியம், சங்க இலக்கியமான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை போன்ற நூல்கள் மிக அதிக அளவில் கூத்து என்றும் கடத்தினை நிகழ்த்துபவர்கள் கடத்தல் என்றும் விரலியர் என்றும் எடுத்துக் கூறிப் பலவாறாகப் போற்றுகின்றன.
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையும் ஆய்ச்சியர் குழுவையும் பண்டைய நடனக் கலையின் நுட்பங்களையும் பாடு பொருள்களையும் விரிவாக எடுத்து இயம்புகின்றன.
சிலம்பினுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தம் உரையில் கூத்து நூல், பரத சேனாதிபதியம், இந்திர காளியம் எனும் நடன நூல்களைப் பற்றி விவரித்துள்ளார். இத்தகு காலத்தொன்மையுள்ள பரதம் காலப்போக்கில் தனது புறவடிவையும் அர வடிவான பாடுபொருளையும் மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது.
எந்த ஒரு கலையும் அது தோன்றிய காலத்தில் இருந்தது போலவே இன்றும் இருந்தால் அக்கலை தேக்க நிலையை அடைந்து விட்டது என்று பொருள். ஆனால் பரதக் கலை காலத்திற்கு ஏற்ப தன்னுள் மாற்றத்தைக் கொண்டு இன்னும் புதிது புதிதாக தனது நோக்கிலும் பாடு பொருள்களிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. இம்மாற்றம் பழமையை முற்றிலும் விளக்கி புதுமை மாறாத பழமை ஒன்றே குறி அளவில் மாற்றத்தைக் கொள்ளாது எனும் வரம்பினும் புதுமை எனும் புத்தொழியைப் பாய்ச்சியது எனலாம்.
பண்டைய மூவேந்தர் காலத்தில் இக்கலை கோயில்களில் பணியாற்றிய ருத்ர பணிகம், தேவர் அடியார், ஸ்ரீ மாணிக்கம் என்பவர்களால் பேணி வளர்க்கப்பட்டது. காலப்போக்கில் கோயில்களில் வருவாய் குறையவே கோயில்களில் பணியாற்றிய தேவர் அடியார்கள் இக்கலையைத் தங்கள் இல்லத்தில் கற்பிக்கத் துவங்கினர். அவ்வாறு அவர்கள் கற்பித்தபோது இக்கலையில் தங்களுக்கென ஒரு பாணியைப் பின்பற்றினர்.
துவந்த காலத்தில் கோயில்களில் ஆடப்பெற்ற நடனம், முற்றிலும் இறைவனின் புகழைப் பாடுவதாகவும் இறைவன் நிகழ்த்திய செயல்களுமென புராணங்கள் கூறிய செய்திகளையே பாடுவதாகவும் இறைவன் நிகழ்த்திய செயல்களுமென புராணங்கள் கூறிய செய்திகளையே பாடுபொருளாகக் கொண்டு அபிநயத்துடன் ஆடியும் வந்தனர்.
இறைவனின் உலாவிலும் இக்கணிகையர் நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியான சதுருத்தில் நடன நிகழ்ச்சியைச் செய்ததால் இது சதிர் என்னும் பெயரையும் பெற்றுத் திகழ்ந்தது.
கோயிலை நீத்த இந்நடனம் கணிகையர் இல்லத்தில் கற்பிக்கப்பட்டபோது இதனது பாடு பொருளிலும் அமைப்பிலும் பெருமளவு மாற்றங்களைக் கொண்டது. இம்மாற்றங்களைப் பெரிதும் முறைப்படுத்தியவர்கள் தஞ்சை நால்வர் எனில் மிகையாகாது.
தஞ்சை நால்வரின் பங்களிப்பில் பரதம் முறைப்படுத்தப்பட்டபோது இந்நடனத்தில் புஷ்பாஞ்சலி, பதம், வர்யும், ஜாவளி, தில்லானா போன்றன சேர்க்கப்பட்டன. இத்தகு மாற்றங்களைக் கொண்டிருந்தாலும் நால்வரின் படைப்புகளில் சிருங்கார தாமே பிரதான ரஸமாகக் கொள்ளப்பட்டது. சிருங்கார ரஸத்திலும் நாயக  நாயகி பாவத்தில் இறைவனுக்குப் பதிலாக அன்றிலிருந்து மன்னர்களைப் பாட்டுடைத் தலைவனாகவும் பாடல்கள் புனையப் பெற்றன. நடனங்கள் நிகழ்த்தப் பெற்றன.
ஆங்கிலேயர் வருகை பின்னர் சுதந்திரம் என்னும் சமூக மாற்றம் மற்றும் அரசியல் மாற்றங்களினால் அனைத்துச் செயற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அத்தகு மாற்றம் நடனத்திலும் ஏற்பட்டது. நடனம் கோயிலில் இருந்து கணிகையர் இடம் சென்று பின்னர் நடனப் பள்ளிகளை வந்தடைந்தது.
நடனப் பள்ளிகளை வந்தடைவதற்கு முன் பரதம் சில ஊர்களைச் சார்ந்த கலைஞர்களின் தனித்துவப் பந்தணை நல்லூர், மெலாட்டூர், வழுவூர், காஞ்சிபுரம் எனும் பாணிகளைக் கொண்டு அப்பாணிகளின் விதிமுறைகள் இன்று வரை பின்பற்றப்படுகின்றன'' என்றவாறு அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து திருமதி ருக்மணி அருண்டேல் உட்படப் பல நடன விற்பன்னர்கள் பரதநாட்டியக் கலையைச் செழுமைப்படுத்திப் பேணி வந்திருப்பதை நாமறிவோம்.
பாவம், ராகம், தாளம் ஆகியவற்றின் சங்கமமாக விளங்குவது பரதநாட்டியம்.
பாவமானது ஆண், பெண் இருபாலாருடைய மனத்திலுண்டாகும் உணர்ச்சிகளை ஜாடைகளால் எடுத்துக் காண்பிப்பது பாவமாகும். பாவமானது அவரவர்களின் பால், வயது மற்றும் சூழ்நிலைக்கேற்ற வண்ணம் வேறுபடக் கூடியது. இது கருத்துக்களைப் புலப்படுத்துவதோடு உணர்ச்சிகளை நவரஸங்கள் மூலம் அதாவது பாவத்தின் மூலம் வெளிப்படுத்திக் காட்டுவதேயாகும்.
இப் பாவம் நான்கு வகைப்படும். அவையாவன விபாவம், அனுபாவம், வியபிசாரி பாவம், சாத்வீக பாவம் என்பன. இந்நான்கு வகை பாவங்களும் கலந்து வருவது சஞ்சாரி பாவமாகும்.
இவ்விதமாக தமது நிருத்தியம் என்ற நூலில் குறிப்பிடும் பாத கலா வித்தகர் மீரா மங்கலேஸ்வரன் அவர்கள் ராகம், தாளம் ஆகியவற்றையும் விளக்கி இருக்கிறார். நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் நடனத்தின் முப்பெரும் பிரிவுகள் என்பதைக் குறிப்பிட்டு விளக்கும்போது நிருத்தியம் என்பதற்கு தரும் விளக்கம் கீழ்க்கண்டவாறு அமைகின்றது.
"கீதம், அபிநயம், பாவம் இவைகளைக் கொண்டு தாளக்கட்டு விடாமல் ஆட வேண்டியவை நிருத்தமாகும். நடனமாகிய நிருத்தமும் அபிநயக் கலையால் கதையை (கருத்துக்களை) வெளிப்படுத்தும் நாட்டியமும் கலந்து திகழும் கலை நிருத்தியம் எனப்படும். பாடலின் பொருளைக் கை முத்திரைகளினாலும் தாளத்தினைப் பாதங்களைத் தட்டி ஆடுவதாலும் பாவத்தினை முகத்தினாலும் கண்களினாலும் வெளிக்கெõண்டு வரல் நிருத்தியமாகும். ரஸ பாவங்களைக் கூட்டி தாளக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி கருத்தைப் புலப்படுத்தலே நிருத்தியமாகும். இதற்கு நிறையப் பயிற்சிகள் செய்ய வேண்டும். நன்றாகப் பயிற்சிகள் செய்யப்பட்டு ஆடப்படும் நிருத்தியம், மன நிறைவை அளிக்கவல்ல நுண்கலையாகும்'' எனக்குறிப்பிடுவர் பாவங்களையும் நவரஸங்களையும் பொருட்கள் மற்றும் செயற்பாடுகளையும் விளக்கும் அஸம்யுத ஆயத்தம் (ஒற்றைக் கை முத்திரைகள் மற்றும் ஸம்யுத ஹஸ்த்தும் (இரட்டைக் கை முத்திரைகள்) ஆகியவற்றையும் கண்டு விபரிக்கின்றனர்.
இங்கு நமது அட்டைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் நடன வித்தகி ரமா வைத்தியநாதன் தமது ஸம்யுத வரஸ்தம் மூலம் அருமையான பாவத்தை வெளிப்படுத்துவதை வாசகர்கள் கண்டு ரசிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக